தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வினோத் டைரக்டில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியிருந்த துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. ஜிப்ரான் இசையில் உருவாகியிருந்த இந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தாலும், நெட்பிளிக்ஸில் கடந்த 8ஆம் தேதி வெளியானது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளிலும் வெளியாகி உள்ளது. தற்போது நெட்பிளிக்ஸில் இந்திய அளவில் டாப் 10 படங்களில் துணிவு முதல் 3 இடத்தை பிடித்துள்ளது. இதனால் துணிவு ரியல் வின்னர் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.