திருமணத்திற்காக மதம் மாறுபவர்கள் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் பொழுது அவர்களுக்கு புரியும் விதமாக அதை உள்ளூர் மொழியில் வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தாமாகவே முன்வந்து மதமாற்றம் செய்கிறார்கள் என்பதற்காக பிரமாணம் பத்திரத்தை அவர்கள் பெறவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது .

திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் அவர்களுடைய முடிவு அதனால் வரும் விளைவுகள் மற்றும் தாக்கங்களை அறிந்திருக்கிறார்கள் என உறுதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் திருமணத்திற்கு பிறகு இரு தரப்பினரின் வயது, திருமணம் செய்யப்பட்ட வரலாறு, திருமண நிலை, பிரமாணபத்திரம் போன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெற வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.