சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆளுநர் ஆர் என். ரவி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். பரிணாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆபிரகாம் லிங்கனையும் உதாரணமாக காட்டுவது மேற்கத்திய அடிப்படை மனநிலை. பல பிரச்சனைகளை தீர்க்க தெரியாமல் உலக நாடுகள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் தீர்வு உள்ளது. 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.