ஆசியாவிலேயே எழுத்தறிவு அதிகம் உள்ள கிராமம் இந்தியாவில் தான் உள்ளது. தோரா மாஃபி என்ற கிராமம் உத்தரபிரதேச மாநிலத்தில் அலிகார் மாவட்டத்தில் உள்ளது. அலிகார் பூட்டு தொழில்களுக்கும் புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மிகவும் பிரபலமானது. கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த கிராமம் ஆசியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற கிராமமாக லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் பட்டியலிடப்பட்டது. இந்த கிராமம் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நாட்டிற்கு பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது . குறிப்பாக இந்த கிராமத்தில் கல்வியறிவு விகிதம் 75 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.

24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி, ஆங்கில வழி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நாட்டின் மிகவும் வளர்ந்த கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 10,000 முதல் 11 ஆயிரம் வரை 80 சதவீதம் குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒரு அதிகாரியாவது பல்வேறு மாநிலம் மற்றும் மத்திய அரசு துறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த கிராமத்தில் அதிகம் அரசு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த கிராம மக்கள் விவசாயத்தை தவிர்த்து கல்வியை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் .இப்படி ஒரு கிராமம் இந்தியாவில் இருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.