இந்தியாவில் ஹிஸ்ப் உத் தஹிரிர் என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக தற்போது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்த அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவித்தல் மற்றும் இதில் இளைஞர்களை அதிகளவில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதன் காரணமாக இதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதில் மோடி அரசு முழு வீச்சுடன் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.