
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் மக்களவையில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த மசோதாவிற்கு அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். முதன்முறையாக மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு 269 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 198 எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டுப் போட்டுள்ளனர்.
திமுக உள்பட இந்திய கூட்டணி கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது மசோதா அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவினுடைய விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குடியரசு தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் ஒரு மாநில தேர்தலில் ஆறு கட்டங்களாக நடக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி சாத்தியம்? என திமுக எம்பி கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.