
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்ற பார்முலா போட்டி, தமிழ்நாட்டின் பெயரை உலகளவில் பரப்பியுள்ளது. இந்த நிகழ்வு, திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டி, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சர்வதேச தரத்திலான நிகழ்வுகளை நடத்தும் திறனை உலகிற்கு காட்டியுள்ளது. மேலும், இது போன்ற சர்வதேச நிகழ்வுகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இனி வரும் காலங்களில், இந்தியாவில் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தய போட்டிகளுக்கு ரோல் மாடலாக தமிழ்நாடு விளங்கும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் பெயரை வரலாற்றில் முதலிடத்தில் இடம் பிடிக்கச் செய்திருப்பதாகவும் திமுக தொண்டர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.