மென்பொருள் ஏற்றுமதியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 478 கோடி மதிப்பிலான மின்னணு சாதனங்கள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 30.86 சதவீதமாக உள்ள நிலையில் நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.