காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு அவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட மத்திய அரசு சிந்து, ஷெனாப் உள்ளிட்ட முக்கிய நதிநீரையும் நிறுத்தி உள்ளதோடு புதிய அணைக்கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிந்து நதிநீரை நிறுத்திய போது பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி தலைவர் பிலாவல் பூட்டோ சிந்து நதிநீரை நிறுத்தினால் கண்டிப்பாக அங்கு இந்தியர்களின் ரத்தம் தான் ஓடும் என்று கூறியிருந்தார். அவரின் கருத்து பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்தியாவுடன் அமைதியாக ஒற்றுமையாக சொல்ல விரும்புவதாக புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியா அமைதி  பாதையில் செல்ல விரும்பினால் சிரித்த முகத்துடன் வரட்டும். அவர்கள் பொய் குற்றச்சாட்டுகளை கொண்டு வராமல் உண்மையுடன் வந்தால் நாமும் நட்புடன் இருப்போம். பக்கத்து நாடுகளுடன் நட்பு பாராட்டுவது தான் பாகிஸ்தானை நோக்கம்.

ஆனால் அதற்கு இந்தியா தயாராக இல்லை என்றால் கண்டிப்பாக பாகிஸ்தான் மக்கள் அவர்களுக்கு ஒருபோதும் மண்டியிட மாட்டார்கள் என்பதை உணர வேண்டும். எங்களுக்கு தியாக உணர்ச்சி இருக்கும் நிலையில் நாங்கள் ஒருபோதும் சண்டையை விரும்பவில்லை. சுதந்திரத்திற்காக மட்டும்தான் இங்கு போராடுகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்பாக இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பாகிஸ்தான் எம்பி ஒருவர் பாகிஸ்தான் போர் தொடுத்தால் நாட்டை விட்டு ஓடி விடுவேன் என்றும் இங்கிலாந்துக்கு சென்று விடுவேன் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.