தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் 3-ம் பாகமும் உருவாகியுள்ள நிலையில் அதுவும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். இதற்கு தற்போது தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி நாளை காலை 9 மணிக்கு இந்தியன் 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.