
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படம்இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் காலையிலேயே இப்படம் வெளியாகியுளது. ஆனால் தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதற்காட்சி தொடங்கியுள்ளது. இந்தியன் 2 குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. தெலுங்கு திரைப்படங்கள் போன்று மசாலாவாக இருப்பதாகவும், ராஜமௌலியின் சாயல் சற்று இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சர்ச்சுகளுக்கு பேர் போன கூல் சுரேஷ் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கிற்கு இந்தியன் தாத்தா வேடம் அணிந்து கையில் தேசிய கொடியோடு குதிரையில் சவாரி செய்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | Tamil Nadu: A fan of actor Kamal Haasan arrives at a film theatre in Chennai to watch 'Indian 2', dressed up as the actor's character from the film. pic.twitter.com/xRmnLkjzNN
— ANI (@ANI) July 12, 2024