பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் சித்தார்த். இவரின் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தபோது தனக்கு வந்த கதாபாத்திரம் ஒன்றைப்பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் பெண்களை அடிப்பது போன்றும் பெண்களின் இடுப்பை கிள்ளுவது போன்றும் பெண்கள் என்ன செய்ய வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிப்பது போன்றும் கதாபாத்திரங்கள் தன்னிடம் வந்ததாகவும், ஆனால் அதனை தன்னால் ஏற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அது போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் தான் இப்போது பெரிய ஸ்டார் ஆகி இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.