
மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. 16 இடங்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமார் 12 இடங்களில் உருவெடுத்து இருக்கிறார்கள். இந்த கட்சிகளுடைய ஆதரவு கண்டிப்பாக பாஜகவுக்கு தேவை என்பதால், 2 கட்சிகளும் நிபந்தனை விதிக்க தொடங்கியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் அக்னி வீர் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜேடியு தரப்பு நம்புகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்கள் நான்கு வருடங்களுக்கு பாதுகாப்பு படையில் பணிபுரிவார்கள். அதன் பிறகு 25 சதவீதம் அக்னி வீரர்கள் மட்டுமே அங்கே தொடர்கள் மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூட ஆட்சிக்கு வந்தால் அக்கினி வீர் திட்டத்தை நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தனர். இப்போது பாஜக ஆட்சி அமைக்க ஜேடியு ஆதரவு முக்கியம் என்ற நிலையில் ஆரம்பத்திலேயே பாஜகவுக்கு செக் வைக்கும் விதமாக அக்னி வீர் திட்டத்தை நீக்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜேடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.