மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாக்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”ஓடிடி தளங்களில் அதிகரித்து வரும் தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கம் பற்றிய புகார்கள் குறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. படைப்பாற்றல் என்ற பெயரில் தவறான விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது.

இதுதொடர்பான விதிகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அதை பரிசீலிக்க அமைச்சகம் தயாராக உள்ளது. இந்த தளங்களில் படைப்பாற்றலுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, ஆபாசத்திற்கு அல்ல. மேலும் படைப்பாற்றல் என்ற பெயரில் யாராவது வரம்பை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.