கோவையில் பல ஏக்கர் பரப்பளவில் ஈசா யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக, யோகா மையம் பாதுகாக்கப்பட்ட வன நிலங்களில் அமைந்துள்ளது என்றும், அதன் கட்டுமானங்களை இப்பகுதியில் கட்டுவதற்கு முன், மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெறவில்லை என்றும், பழங்குடியின மக்களின் வன நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஈஷா அமைந்துள்ள இடம் ஒரு அங்குலம் அளவு பழங்குடியின மக்களின் வன நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக நிரூபித்தால் நான் நாட்டை விட்டே வெளியேறுகிறேன் என சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘நான் பலவீனமானவன் அல்ல அரசர்களுக்கு நல்லாட்சி புரிய உதவும் அறிவுரைகளை யோகிகள் வழங்கியுள்ளனர். அதனால் சாமியார்கள் அரசியல் பேசுவது தவறு என சொல்ல முடியாது’ என்றார்.