இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருவது மட்டுமல்லாமல் அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பொதுமக்களின் வசதிக்காக ஆதார் கார்டில் முகவரி மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் கார்டை அப்டேட் செய்தால் மட்டுமே ரேஷன் பொருள்களை பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது வரை ஆதார் கார்டை அப்டேட் செய்யாமல் வைத்திருக்கும் குடிமக்கள் மை ஆதார் என்ற போர்டல் மூலமாக ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யலாம் எனவும் ஆதார் மையங்கள் மூலமாக அப்டேட் செய்ய 25 ரூபாய் கட்டணம் செலுத்தி அப்டேட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதும்