மதுரை மாவட்டம் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்று நள்ளிரவு 12.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகப்படும் படியாக திரிந்த நபர்களை சோதனை செய்தனர். அதில் கேரளாவை சேர்ந்த கிரண்ராஜ் என்பவர் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்தார்.

அவரை போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதனால் போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 12.5 கிலோ கஞ்சா இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அவரை கைது செய்து மதுரை மாநகர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர் கடத்திய 12.5 கிலோ கஞ்சாவே போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மதுரை ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.