
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 112 ரன்கள் வரை எடுத்திருந்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கில் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.
இதனால் எளிதாக இலக்கை எட்டிய குஜராத் அணி 19-வது ஓவரில் 205 ரன்கள் எடுத்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் சாய் சுதர்சன் 108 ரன்களும், கில் 93 ரண்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் மற்றும் சுப்பன் கில் ஜோடி தற்போது புதிய சாதனையை படைத்துள்ளனர். அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக் காரர்களாக ஆரம்பத்திலே களம் இறங்கும் சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோர் இதுவரை 839 ரன்கள் எடுத்துள்ளனர். இதனால் அவர்கள் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளனர்.
மேலும் இரண்டாம் இடத்தில் ஷிகர் தவான் பிரித்விஷா ஜோடி இருக்கிறது. இவர்கள் 744 ரன்கள் குவித்துள்ளனர். அதன்பிறகு 3-ம் இடத்தில் மயங்க் அகர்வால்-கே எல் ராகுல் ஜோடி 671 ரன்களும், 4-ம் இடத்தில் மயங்க் அகர்வால்-கே எல் ராகுல் ஜோடி 602 ரன்களும், 5-ம் இடத்தில் விராட் கோலி மற்றும் படிக்கல் ஜோடி 601 ரன்களும் எடுத்து இருக்கிறார்கள்.