
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் இன்று மதியம் நிவாரண பொருட்களைவழங்கினார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், அவர்கள் பட்ட சிரமங்கள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கான அந்த வெள்ளத்திற்கு உதவியாக சிறு தொகையும் வழங்கினார். காய்கறி, மளிகை சாமான் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் அவர் தொடர்ந்து அளித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டது.
முதலில் ஒவ்வொரு பொது மக்களும் அவர்கள் அமர்ந்திருக்க கூடிய இடத்திற்கு சென்று நடிகர் விஜய் நிவாரண பொருட்களை கொடுத்துள்ளார். தனியார் மண்டபத்தில் நடைபெறக்கூடிய இந்த நிவாரண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தான் சார்ந்து இருக்க கூடிய மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் பங்கேற்றுள்ளார். உள்ளே வந்திருக்கக்கூடிய நபர்கள் அதிகமான அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள். மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள்.. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களை இயக்கத்தின் உடைய நிர்வாகிகள் தங்களுடைய பகுதிகளில் யார் அவர்களின் வீடுகள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டதோ.. யாருடைய வீடுகள் எல்லாம் இடிந்து விழுந்துள்ளதோ அவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அதனை சென்னையில் இருக்கக்கூடிய தலைமை கழகத்திற்கு கொடுத்து அவர்கள் அந்த இறுதிப் பட்டியலை கொடுத்துள்ளனர்..
அந்த அடிப்படையில் 1500 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. வீடுகள் சேதமடைந்த நபர்களுக்கு தலா 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்க்கு தலா 1 லட்சம் வழங்கப்பட்டது. ரூபாய் 10,000 முதல் ரூபாய் 50,000 வரையில் நிவாரணம் வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு தொகை கவரில் வைத்து வழங்கப்பட்டது. அதேபோல அனைவருக்குமே மளிகை சாமான், காய்கறி போன்றவை வழங்கப்பட்டது. 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அவர்களுக்கு ஆறுதலோடு சேர்த்து இந்த உதவியும் செய்யப்படக்கூடிய காரணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். அனைவருமே சிரித்தபடி வாங்கிக் கொண்டனர்.. முதற்கட்டமாக விஜய் மக்கள் அமர்ந்திருக்க கூடிய அந்த இருக்கைக்கு சென்று அவர்களிடம் அந்த நிவாரண பொருட்களை வழங்கினார். விஜயிடமிருந்து பெறும்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் வயதானவர்கள் என அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியோடு உற்சாகத்தோடு அந்த பொருட்களை வாங்கினார்கள்.. பின் ஒவ்வொருவராக வரிசையில் வந்து நடிகர் விஜயிடம் வந்து நிவாரண பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றனர்..
மேடையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் நிவாரண பொருளை வழங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு இளம் பெண் மாஸ்க்குடன் வந்து விஜயிடம் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது விஜய் இந்த நிவாரண பொருட்கள் வேண்டாமா என கேட்டார். அதற்கு அந்த பெண் விஜயிடம் ஏதோ சொல்லி விட்டு சென்றார். அந்த பெண் செல்பி எடுக்கும்போது தளபதி விஜய் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
How jovial he is. Noone can replace him.
Love u anna @actorvijay#NellaiWelcomesTHALAPATHY#ThalapathyVijaypic.twitter.com/ccPbo6P7oF— ᴄꜱᴋ ᴊᴇɴɪꜰᴇʀ ❣️ (@JeniThoughtz) December 30, 2023
https://twitter.com/AishThalapathy/status/1741030698595897534