நேற்று ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை தொடங் கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 168 நாட்கள் நடைபெறும் யாத்திரையில் அண்ணாமலை 1700 கிமீ பயணம் செய்கிறார். ‘என் மண், என் மக்கள்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் யாத்திரையில் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடுகிறார்.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல. அது பாவ யாத்திரை; அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் தான் பாத யாத்திரை தொடக்கம் மணிப்பூருக்கு சென்று ஏன் அமைதி யாத்திரையை தொடங்கி வைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.