தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் விஜய் அவர்கள் திமுக மற்றும் பாஜகவினரை நேரடியாக சாடி தனது கருத்துக்களை முன் வைத்திருப்பார். அவர்கள் தான் நமது பிரதான எதிரிகள் என்பதையும் சுட்டிக்காட்டி பேசி இருப்பார். இருப்பினும், மற்ற அரசியல் கட்சிகள் போல் நாங்கள் குறை மட்டும் கூற வரவில்லை அதற்காக கண்களை மூடிக்கொண்டும் இருக்க மாட்டோம். எங்களது கருத்துக்களை நாங்கள் கருத்து ரீதியாக முன் வைப்போம். டீசன்ட் அப்ரோச் & டீசன்ட் அட்டாக் என்ற வாசகத்தை முன்வைத்து டீசன்ட்டான அரசியல் செய்ய தான் தமிழக வெற்றி கழகம் வந்திருக்கிறது என்பதை தெளிவாக கூறியிருப்பார்.

அதன்படி அவருடைய தொண்டர்களும் டீசன்டான அரசியல் மட்டுமே செய்ய வேண்டும் என்பதை விஜய் அவர்களின் விருப்பம். ஆனால் அதற்கு மாறாக விஜய் அவர்கள் சமூக வலைதளங்களில் நடந்து கொள்வதாக திமுக சுட்டிக்காட்டி குற்றம் சாட்டியுள்ளது. அதில், திமுகவின் பதிவுகள் பலவற்றிற்கு கீழ் விஜய் அவர்களின் மாநாடு முடிந்த பிறகு

அவரது தொண்டர்கள் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வருவதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு கொள்கை கோட்பாடு என பேசுகிறீர்களே உங்களது தொண்டர்களின் கொள்கை மற்றும் கோட்பாடை பாருங்கள் என திமுகவை சேர்ந்த நபர் ஒருவர் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டியுள்ளார் இது தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.