
யூடியூப் பிராங்க் வீடியோக்கள் மூலம் பிரபலமான நடிகர் பிஜிலி ரமேஷ் திடீரென மறைந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. தற்போது, அவரது மனைவி அளித்துள்ள பேட்டியில் பிஜிலி ரமேஷின் ரஜினிகாந்த் மீதான அளப்பரிய அன்பையும், vj சித்துவின் அன்பான உதவியையும் வெளிப்படுத்தியுள்ளது.

பிஜிலி ரமேஷின் மனைவி கூறுகையில், “என் கணவர் ரஜினிகாந்த் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிப்பது அவருடைய கனவாக இருந்தது. அவர் மறைவதற்கு முன், ரஜினி சார் ஒருமுறை பார்த்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுவார். vJ சித்து அவர்கள், பிஜிலியை நன்கு அறிந்தவர் என்பதால், எங்களுக்கு ரூபாய் 50,000/- கொடுத்து உதவி செய்தார். அவர் கட்டிலில் தூங்கும் போது, அவரது தலைக்கு மேலே ரஜினி சார் – ன் புகைப்படம் தான் இருக்கும்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.