
இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில், லங்காஷயர் மற்றும் கிளோஸ்டர்ஷயர் அணிகளுக்கு இடையில் நடந்த ஆட்டத்தில், ஒரு விசித்திரமான சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. லங்காஷயர் அணியின் பவுலர் டோம் பேலீ பேட்டிங் வந்தபோது, அவருடைய மொபைல் போன் பாக்கெட்டில் இருந்து விழுந்தது.
அதாவது லங்காஷயர் 401/8 என்ற நிலைமையில் இருந்த போது பேலீ 31 பந்துகளில் 22 ரன்கள் வரை எடுத்திருந்தார். அதோடு ஆட்டம் முடியும் வரை அவுட் ஆகாமல் நிலைத்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது ரன் ஓடுவிட்டு திரும்பி செல்லும் போது அவரது மொபைல் திரும்பிச் சென்ற போது கீழே விழுந்தது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பல ரசிகர்களிடையே விமர்சனத்தையும் கேள்விகளையும் ஏற்படுத்தியது. “இது சட்டவிரோதமில்லைவா?” என ஒருவர் X-இல் பதிவு செய்திருந்தார். “இப்படி ஒரு விஷயத்துக்கு தண்டனை கிடைக்க வேண்டியதுதானே?” என மற்றொரு பயனர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
— No Context County Cricket (@NoContextCounty) May 3, 2025
முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் டுடோர் கூட இந்த சம்பவத்தில் அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். பேலீ தொடக்கத்தில் அவரது மொபைல் விழுந்ததை கவனிக்கவில்லையென தெரிகிறது. ஆனால், கிளோஸ்டர்ஷயர் பவுலர் தான் முதலில் அதை கவனித்ததாகக் கூறப்படுகிறது. போன் பிறகு அவரிடம் திருப்பி வழங்கப்பட்டதா அல்லது மைதான அதிகாரிகள் கைப்பற்றினார்களா என்பது தெரியவில்லை.
மேலும் பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வீரர்கள் மைதானத்தில் நுழையும் போது செல்போனை வாங்கி வைத்து விடுவார்கள். கிரிக்கெட் விளையாடும்போதும் சரி அவர்கள் பெவிலியனில் இருக்கும்போதும் சரி செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. போட்டி முழுமையாக முடிவடைந்த பிறகு தான் செல்போன் வழங்கப்படும். மேலும் அப்படி இருக்கையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது அவர் செல்போனை கொண்டு வந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.