சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ரயில் மெட்ரோ கட்டுமான பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் இரண்டு வழித்தடம் மூன்றில் நேரு நகர் முதல் சோளிங்கநல்லூர் வரை உயர்மட்ட வழிதடத்தில் இந்திய மெட்ரோ திட்டங்களில் முதன்முறையாக மேம்பட்ட கிரேன் தொழிற்சாலை பயன்படுத்தி 20 மீட்டர் உயரத்திற்கு 30 மீட்டர் யூ கரெக்ட் கொண்டு செல்வதற்கும் அமைப்பதற்கும் மேம்பட்ட புல்லர் ஆக்சில் அமைப்பு அறிமுகப்படுத்தி சென்னை மெட்ரோ ரயில் ஆனது மைல்கல்லில் ஒரு குறிப்பிட்ட சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.