
கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் சில ட்ரோல்ஸ்களும் இணையத்தில் கோட் திரைப்படம் குறித்து வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, கோட் திரைப்படம் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகர் இயக்கிய ராஜதுரை படத்தின் உடைய கதை தான் என தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பல காட்சிகள் அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் மாறுபட்டாலும் கதையின் மூலக்கரு ஒன்றுதான் என விமர்சனம் முன்வைத்து வருகின்றனர். ராஜதுரை படத்தில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் விஜயகாந்த் அவர்களின் மகனை சிறுவயதில் இருக்கும்போதே வில்லன் கடத்தி கொண்டு சென்று அவனை மூளை சலவை செய்து பின்னாளில் வளர்ந்த பிறகு தந்தை விஜயகாந்த் அவர்களையே எதிர்க்கும் வகையில் வளர்த்திருப்பார்.
அதிலும் விஜயகாந்த் டபுள் ஆக்சன் தான். இதே மூலக்கதை கதை தான். கோட் திரைப்படத்தில் இருப்பதாகவும் படம் பார்த்தவர்களுக்கு அது நன்றாக புரியும் எனவும் நாங்கள் ஸ்பாய்லர் செய்யவில்லை வேண்டுமென்றால் ராஜதுரை படத்தின் ஸ்டோரி plot என்னவென்று கூகுளில் தேடுங்கள் உங்களுக்கே விடை கிடைத்துவிடும் என இணையத்தில் புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.