காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் அதிக தொண்டர்களை வைத்து இருக்கும் அதிமுக இன்று 4ஆக உடைந்து கிடைக்கிறது. மற்றொரு புறம் அதிமுகவின் முகமாக இருக்கும் இரட்டை இலை முடங்கும் நிலையில் இருக்கிறது. இதனால், பாஜக., புதிய நீதிக் கட்சி, TMMK போன்ற சின்ன சின்ன கட்சிகளிடம் கூட, OPS-EPS தரப்பு போய் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் பார்க்காத ஒன்று. இது உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியே.