தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் 5 ம் தேதி திரையுலகில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர் “சென்னை 28” மற்றும் அஜித்தை வைத்து மங்காத்தா போன்ற படங்களை இயக்கி மாஸ் ஹிட் கொடுத்துள்ளார்

இதனால் “கோட்” திரைப்படமும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இதுகுறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு “அஜித் சார் மங்காத்தா பண்ணும் போதே அடுத்து படம் விஜய்யை வைத்து பண்ணு ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்வாரு. கோட் படத்தை விஜய்யை வைத்து பண்றேன்னு சொன்னதும் அருமையா பண்ணு என்று சொன்னாரு”.

அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க சென்றேன். அப்போது நான் விஜய்யிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அஜித் சாரிடம் கொடுத்தேன். அதன்பின் இருவரும் சகஜமாக, அழகாக, இயல்பாக மற்றும் நண்பர்களாக பேசிக் கொண்டதாகவும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித் கோட் படம் மங்காத்தாவின் வெற்றியைவிட நூறு மடங்கு அதிகமா இருக்க வேண்டும் எனவும்  அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.