சாதி அமைப்பின் தோற்றம் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவானது என்று தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வரலாற்றை திரித்து பேசுவது உண்மையை குழிதோண்டி புதைப்பதாகும். இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறை சாதியின் பெயரால் நடந்த கொடுமைகளே.

அந்த மாபெரும் பழியை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சிக்காமல் மனித தன்மையற்ற சாதிய கட்டமைப்பை இந்திய சமூகத்தை விட்டு அகற்ற முயல்வதே நாகரிகம். பகுதறிவு, நடுநிலை, பரந்த மனம் இவை தான் மனித பண்புகள் என்ற உண்மையை கற்றவர்களே புரியாதது தான் இந்திய கலாச்சார பெருமையா என கேள்வி எழுப்பியுள்ளார்.