குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் திசா தாலுகாவின் மகாதேவியா கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டின் அடித்தளத்தில் போலீசார் சோதனை நடத்தியதில், போலி ரூபாய் நோட்டு தயாரிப்பு தொழிற்சாலை அம்பலமாகியுள்ளது.
நள்ளிரவு நடைபெற்ற இந்த சோதனையில், சஞ்சய் சோனி மற்றும் கௌசிக் ஸ்ரீமாலி என்ற இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதோடு, ரூ.39 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள போலி ரூ.500 நோட்டுகள், 5 அச்சுப்பொறிகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வீடு, குற்றப்பின்னணி கொண்ட ரைமல்சிங் பர்மாருக்கு சொந்தமானது என்பதும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
#AajKiBadiKhabar | गुजरात के बनासकांठा में नकली नोट बनाने की फैक्ट्री का हुआ खुलासा
– तहखाने में 40 लाख रुपये कीमत के 500 के नकली नोट बरामद #Crime #FakeCurrency #GujaratPolice #Banaskantha #Gujarat #India @romita_tiwari pic.twitter.com/N7v7O0mEvH
— India TV (@indiatvnews) September 4, 2025
“>
முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் போலி நோட்டுகளை அச்சிட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். ரைமல்சிங் மற்றும் சஞ்சய் சோனி இருவருக்கும் மிரட்டல், மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதாகவும், இந்த போலி நாணயத் தொழிற்சாலையின் மூளையாக சஞ்சய் சோனி செயல்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி ரூபாய் நோட்டுகளுக்கான பொருட்களை எங்கிருந்து பெற்றனர், தயாரித்த நோட்டுகளை யாருக்கு வழங்கினர், முழு நெட்வொர்க் எப்படி இயங்கியது போன்ற விஷயங்களில் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
