
ஜப்பானை சேர்ந்த நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்திருந்தது. அந்த விளம்பரத்தை பார்த்த பலர் வேலைக்கு விண்ணப்பித்தனர். அதன்பிறகு நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற 21 வயதுடைய வாலிபர் ஒருவர் தனது வயதை காரணம் காட்டி வேலை மறுக்கப்பட்டதாக ரெட்டிட் சமூக வலைதளத்தில் வேதனையாக பதிவிட்டுள்ளார்.
அவர் எல்லா நேர்காணல்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் அவரது வயதுக்கு அவர் கேட்ட வருமானம் மிகவும் அதிகமானது என நிறுவன மேலாளர் கூறியதாக வாலிபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் வேலை தேடும் போது இளம் வயதாக இருப்பது நிராகரிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருப்பதாக அந்த வாலிபர் கூறியுள்ளார்.