
சீனாவைச் சேர்ந்த மாயா என்ற இளம்பெண் பூங்கா பராமரிப்பாளர் வேலைக்காக அதிக ஊதியம் தரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் வேலையை உதறி தள்ளினார். பூங்கா பராமரிப்பாளர் வேலையில் குறைவான ஊதியம் கிடைத்தாலும் விலங்குகளுடன் நேரத்தை கழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அதன் மூலம் விலங்குகளின் குணாதிசயங்களை பற்றி எளிதாக அறிந்து கொள்ள முடிவதாக மாயா கூறியுள்ளார். மாயா கேம்பிரிட் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டம் பெற்றவர். பூங்கா பராமரிப்பாளர் வேலைக்காக அதிக சம்பளம் தரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் வேலையை மாயா உதறி தள்ளியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.