மத்திய பிரதேசத்தின் மொரினா நகரில் சாலையை கடந்து சென்ற ஒரு ஆண் பாம்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் சாலை ஓரத்தில் அந்த பாம்பை தூக்கிப் போட்டுவிட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த பெண் பாம்பு ஆண் பாம்பின் உடலை பார்த்து வேதனையில் மூழ்கியது.

சிறிது நேரம் சுற்றி சுற்றி வந்து ஆண் பாம்புக்கு அருகிலேயே பெண் பாம்பும் படித்துக் கொண்டது. சுமார் 24 மணி நேரம் வரை அங்கேயே படுத்து கிடந்த பெண் பாம்பு அந்த இடத்திலேயே உயிரை விட்டது. ஆண் பாம்பு இறந்த துக்கத்தில் அதே இடத்தில் பெண் பாம்பும் உயிரிழந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. அந்த பாம்புகளின் அன்பு மற்றும் பாசத்திற்காக அதே இடத்தில் ஒரு மேடை அமைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.