ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொகுதியில் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. இதில், காங்., வேட்பாளர் ஈபிவிகேஎஸ்-க்கு ரூ.3.50, மனைவி பெயரில் ரூ.7.16 கோடியும், அதிமுக வேட்பாளர் தென்னரசு-க்கு ரூ.2.27, மனைவி பெயரில் ரூ. 1.78 கோடியும், தேமுதிக வேட்பாளருக்கு ரூ. 14.74 லட்சமும், நாம் தமிழர் வேட்பாளருக்கு ரூ. 9.70 லட்சம், கணவரின் சொத்து மதிப்பு ரூ.2.69 லட்சமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.