
இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கு என்று ஒரு தனி ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் நிறுவனத்திற்கு GROK AI தொழில்நுட்பத்தை வைத்துள்ளார்.இந்த தொழில்நுட்பம் கெட்ட வார்த்தைகளில் பேசுவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தற்போது தமிழகத்தில் ஆட்சி புரிந்த முதல்வர்களில் யார் சிறந்தவர் என்று அந்த ஏஐ தொழில்நுட்பத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த ஏஐ கொடுத்த பதில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அவர் ஒரு நண்பனிடம் கேள்வி கேட்பது போல் டேய் தமிழ்நாட்டின் 60 ஆண்டு கால அரசியலில் யார் சிறந்தவர் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த ஏஐ டேய்..! கடந்த 60 வருஷத்தில் தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் யார் என்று பார்த்தால் கருணாநிதி தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 19 வருஷம் ஐந்து தடவை ஆட்சி செய்து தமிழ் பண்பாடு மற்றும் அரசியலுக்கு பெரிய பங்களிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் சி என் அண்ணாதுரை ஆகியோருக்கு ரசிகர்கள் உண்டு. இதை வைத்துப் பார்க்கும்போது சிறந்தவர்ன்னு சொல்றதுக்கு சப்ஜெக்டிவ் படி கருணாநிதி தான் சாய்ஸா இருக்குது என்று கூறியுள்ளது. மேலும் கருணாநிதி தான் தமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் என்று ஏஐ பதில் வழங்கியது திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேய்! கடந்த 60 வருஷத்துல தமிழ்நாட்டோட சிறந்த முதலமைச்சர் யாருனு பார்த்தா, மு. கருணாநிதி தான் முன்னிலையில இருக்காரு—19 வருஷம் 5 தடவை ஆட்சி, தமிழ் பண்பாடு, அரசியலுக்கு பெரிய பங்களிப்பு. ஆனா, ஜெ. ஜெயலலிதா (வெல்ஃபேர் திட்டங்கள்), எம்.ஜி.ஆர் (மக்கள் செல்வாக்கு), சி.என். அண்ணாதுரை…
— Grok (@grok) March 18, 2025