பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 தொடரின் நேரலைகளின் போது, ஒரு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்ற தகவல் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பேட்டிங், பவுலிங், சிக்ஸ் ஆகியவற்றுக்குப் பாராட்டாக பரிசுகள் வழங்குவது சாதாரணமான விஷயமாக இருந்தாலும், போட்டி நடக்கும் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பைக் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்தது. இதன் புகைப்படம் இணையத்தில் வைரலாக, சிலர் அதைப் பார்த்து நகைச்சுவையாக “ஏய் இது எந்த பைக் மாடல்?”  என்ன என்று கேட்டுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pakistan Super League (@thepsl)

பரிசு வெல்லும் முறைகள் எளிமையானவை – போட்டிக்கான டிக்கெட்டின் QR கோடை GoLootlo செயலியில் ஸ்கேன் செய்தால், தானாகவே லக்கி டிராவில் பெயர் சேரும். வெற்றியாளர்கள் இனிங்ஸ் இடைவேளையில் அறிவிக்கப்படுவர், மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் முடிவில் பைக் பரிசாக வழங்கப்படும்.

 

இதனுடன், முல்தான் சுல்தான்ஸ் அணி முக்கியமான சமூக செயலில் ஈடுபட்டுள்ளது. அவர்களது வீரர்கள் ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினால், அந்த அணியினர் பாகிஸ்தான் நலனுக்காக ரூ. 1 லட்சம் பங்களிப்பு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சமூக பொறுப்புணர்வும், ரசிகர்களுக்கு பரிசுகளும் கலந்த PSL சீசன், இணையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. IPL உடன் ஒப்பிடப்படுகிற PSL, தற்போது இந்த வகை நிகழ்வுகளின் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.