பொதுவாக சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை பதிவிடும்போது திடீரென அது ஓவராக டிரெண்டாகி விடுகிறது. அப்படித்தான் தற்போது நாடு முழுவதும் கிப்லி புகைப்படங்கள் டிரெரண்டாகி வருகிறது. முன்னதாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் போட்டி நடைபெறும் போது விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனியின் போட்டோவை கிப்லி வடிவில் மாற்றி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இதேபோன்று பலரும் தற்போது கிப்லியில் புகைப்படங்களை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

இது ஓவராக ட்ரெண்டாவதால் தங்கள் ஊழியர்கள் தூக்கமின்றி சிரமப்படுவதாகவும் சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் நம்ம மக்கள் கேட்பார்களா.? இந்த கிப்லி புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வரும் நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கு ஃபேன் ஆகிவிட்டார். மேலும் அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் மறக்க முடியாத புகைப்படங்கள் என்று கிப்லி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.