மத்திய கல்வித்துறை இணை மந்திரி ஜெயந்த் சவுத்ரி ஆஸ்பெஸ்டாஸ் சீட் பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது நாடு முழுவதும் தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஸ்டார்ஸ்  முதல் வகை புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் சீட் பயன்படுத்தக் கூடாது என்று அவர் அதிரடியாக தடை விதித்துள்ளார். இந்த வகை சீட் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்பதால் உலக அளவில் 65-க்கும் மேற்பட்ட நாடுகள் அதனை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

 

 

இதன் காரணமாக நம்முடைய குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான புற்றுநோய் இல்லாத ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாமும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து கேந்திரியா மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விஞ்ஞானிகள் கூறிய அபாயங்களை புரிந்து கொண்டு தான் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.