தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆவின் என்ற பெயரில் பால் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை சார்பில் தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயலாற்றுயாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்ற நிலையில் அதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர், தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலக்கி தான் விற்பனையாளர்கள் ஆவின் பாலை விற்பனை செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்கலாம். ஆவி நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை சரி செய்து வருவதன் மூலமாக தற்போது பால் விற்பனை எட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பால் பாக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.