காலாண்டு விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் 1 ல் 5 வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஏனெனில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றதால் அக்.9ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பேசக்கூடாது. மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது. மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது என பள்ளியில் என்ன நடந்தாலும் மேலிட கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது