தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் கொழுப்பு சத்து விகித அடிப்படையில் பாலை தரம் பிரித்து ஆரஞ்சு, பச்சை மற்றும் ஊதா உள்ளிட்ட பால் பாக்கெட் களை மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. தினம் தோறும் 2.06 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 25 சதவீதம் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் நிலையில் மற்றவை தனியார் பால் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது