கர்நாடகா மாநிலத்தில் அரசு நடத்தும் சாலை போக்குவரத்துக் கழகங்களின் (ஆர்டிசி) ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியத்தை 15 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதோடு இதற்குரிய செலவு ரூ.45.13 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர 4 வருடங்களில் சுமார் ரூ.2,166 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் எச்.கே. பாட்டீல் அமைச்சரவை கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில்  ஒன்றான சம்பள உயர்வு இப்போது அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மோட்டார் வாகன வரி மற்றும் நிலுவைத்தொகையான 79.85 கோடி ரூபாயை RTC-கள் தள்ளுபடி செய்யவும் அரசு முடிவுசெய்துள்ளது. அதோடு தீயணைப்பு சேவைகள் துறையால் கட்டிடங்களுக்கு 15- 21 மீட்டர் வரை கட்டாய தீ என்ஓசி விதிகளில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.