விஜ்ஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடைபெற இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநாடு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதற்காக 36 பேர் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு தொடர்பான பணிகள் முடிவடைந்த பிறகு த.வெ.க. தலைவர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.