இத்தாலி நாட்டில் வருடந்தோறும் ஆரஞ்சு பழங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இத்தாலியில் ஆரஞ்சு பல சண்டை திருவிழா களைக்கட்டி உள்ளது. ஒரு குழுவினர் குதிரை மீதும் மற்றவர்கள் கீழே நின்றும் ஒருவர் மீது ஒருவர் ஆரஞ்சு பழத்தை வீசுகின்றனர்.

இந்த திருவிழா கொண்டாடுவதற்கு காரணம் என்னவென்றால், பழங்காலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழைப் பெண்ணான வியூலேட்டாவை அவருடைய திருமணத்தின் போது அரசு குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூக்கி சென்று விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த வியூலேட்டா அந்த நபரின் தலையை துண்டித்து பகுதி மக்களுக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளார். அவரின் நினைவாக இந்த ஆரஞ்சு பழ விழா நடைபெற்று வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.