பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தன்னுடைய ஆட்சியின் போது கட்சிக்காக பல்வேறு நாடுகளிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி விசாரணை ஒன்றே நடத்தியது. இந்த விசாரணையில் கட்சியின் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு வெளிநாடுகளிடம் இருந்து நீதி பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக இம்ரான் கான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது. இதனால் அவர் லாகூர் ஹைகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கட்சியின் பெயரில் வெளிநாட்டில் நிதி பெற்ற வழக்கில் இம்ரான் கான் லாகூரை ஹைகோர்ட்டில் ஆஜராகி உள்ளார். இதனை அடுத்து இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு பின்பு இம்ரான் கானுக்கு நீதிபதி தாரிக் சலீம் ஷேக் அவர்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.