
தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் பலரும் ரயிலில் பயணிப்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக பண்டிகை காலங்களில் சில மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு என்பது தொடங்கி விடுகிறது. அதாவது ரயில் டிக்கெட் 120 நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
அதன்படி இந்த ஆண்டு ஆயுத பூஜை அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகின்ற நிலையில் இதனை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் அக்டோபர் 10ஆம் தேதி சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. இதில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 20 நிமிடங்களில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் என தெரிகிறது.