பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் எந்தவித மாற்றமும் இருக்காது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி மே 25ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தற்போதைய சூழ்நிலைகள் போட்டித் திட்டத்தில் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என பிசிசிஐ பிரபல செய்தி நிறுவனத்திடம் உறுதியாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள அட்டவணை மற்றும் விளையாட்டு அரங்குகள் மாற்றம் செய்யப்படாமல், அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாப்புடன் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் தற்போதைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இருவரும் போட்டிகளை பாதுகாப்பாக பார்க்க முடியும் என BCCI உறுதி அளித்துள்ளது.