பிரபல லண்டன் பல்கலைக்கழகம் சிகரெட் பிடிப்பதால் வாழ்வின் ஆயுட்காலம் குறையும் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 20 சிகரெட்டுகளை பிடித்தால் ஒருவரின் ஆயுட்காலத்தில் 7 மணி நேரம் குறைகிறது. இதுவே அவர் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடித்து சிகரெட் பிடிப்பதை குறைத்து வந்தால் வாரத்தில் உள்ள 7 நாட்களில் ஒரு நாளை முழுவதுமாக சேமிக்கிறார்.

அப்படி பார்க்கும்போது ஒரு வருடத்தில் அவர் 50 நாட்களை முழுமையாக சேமிக்கிறார். மேலும் சிகரெட் பிடிப்பதை மட்டும் நிறுத்திவிட்டால் வாழ்வின் இழந்த நாட்களை மீண்டும் திரும்ப பெற்று விடலாம் என்று லண்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.