ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக பல பெண்கள் தங்களுடைய கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் வசித்து வரும் CPRF முனீர்கான் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த மினால் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு காஷ்மீரில் வசித்து வரும் நிலையில் தற்போது மத்திய அரசின் உத்தரவினால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மேலும் இது மினாலுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனி நான் எப்போது என் கணவரை சந்திப்பேன் என்று தெரியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.