நிலம் மற்றும் வீடு உரிமையாளர் கண்டிப்பாக பட்டா வைத்திருப்பது அவசியமாகும். இதன் மூலமே அவரது உரிமை அந்த நிலம் மற்றும் வீடு மீது நிலை நாட்டப்படும். எனவே இன்னொருவரிடம் இருந்து புதிதாக ஒருவர் இடம், வீடு வாங்கும் போது அவர் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவது அவசியம். இல்லையென்றால் பின்னாளில் பிரச்சனை வரக்கூடும். பட்டா மாறுதலுக்கு வீட்டில் இருந்தே எளிதில் விண்ணப்பிக்க முடியும். முதலில் தமிழக அரசின் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று பெயர், மொபைல் எண், கேப்சா மற்றும் ஓடிபி உள்ளிட்ட முதலில் பயனாளராக பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உள் நுழைந்ததும் மீண்டும் மொபைல் எண் மற்றும் ஓடிபி பதிவிட வேண்டும்.

அப்போது புதிதாக திறக்கும் திரையில் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ததும் இரண்டாவதாக இன்னொரு புதிய பக்கம் திறக்கும். அதில் எந்த வகை பட்டா மாற்றம் என்று பட்டியலிடப்பட்டுள்ளதில் ஒன்றை தேர்ந்தெடுக்க கோரப்பட்டிருக்கும். அதில் உங்கள் நிலப்பகுதி எந்த வகை என்பதை தெரிந்து அந்த வகை பட்டா மாறுதலை தேர்வு செய்ததும் மற்றொரு பக்கத்தில் மாவட்டம்,ஊர், ஆவண பதிவு எண், தேதி, பட்டா எண், நில வகை மற்றும் பரப்பளவு உள்ளிட்டவற்றை உள்ளிட்ட பிறகு கட்டணம் செலுத்தி பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.