உலகம் முழுவதும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்வது சுலபமாக இருப்பதால் பலரும் அதனை விரும்புகிறார்கள். சமீபகாலமாக ஆன்லைன் ஆர்டர்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கிய பிறகு சிலர் அதனை பிரித்துப் பார்த்து அதற்குள் என்ன இருக்கிறது என்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வைரலாக்குகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒருவர் ஆன்லைனில் முட்டையை ஆர்டர் செய்தார். அவருக்கு காத்திருந்ததோ அதிர்ச்சி தான். அதாவது ராஜ்கன்வர் என்ற வாலிபர் பிரபல  வலைதளத்தில் முட்டைகளை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு முட்டைகளுடன் கூடிய ஒரு ட்ரே வந்தது. அவர் தனக்கு வந்த முட்டைகளை வீடியோவாக பதிவு செய்து காட்டுகிறார்.

அவர் முட்டைகளை உடைத்ததும் அது கெட்டு போய் துர்நாற்றம் வீசியது. அந்த முட்டைகளை உடைக்கும் போது அது மிகவும் கருப்பாக இருந்ததையும் வீடியோவில் காட்டினார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களுக்கு ஆன்லைன் ஆர்டரில் வந்த பொருட்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Bella R (@bella_the_travel_girl)